close
Choose your channels

ஸ்டார் ஹோட்டலில் பிச்சைக்காரர்களுக்கு விருந்து வைத்த முக்கிய இயக்குநர்… நெகிழ்ச்சி வீடியோ!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் விஜய் ஆண்டனி செய்துள்ள ஒரு காரியம் அனைவரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் வெளியான சில தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து ‘உத்தம புத்திரன்’, ‘அங்காடி தெரு’, ‘வேலாயுதம்’, ‘வெடி’ எனப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வெற்றிப்பெற்றார். இவரது இசையில் ‘நாக்க முக்க‘, ‘டைலாமோ‘, ‘ஆத்திச்சூடி‘ போன்ற பல ஹிட் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இதைத் தொடர்ந்து ‘நான் திரைப்படம் மூலம் நடிகர் அவதாரம் எடுத்த அவர் ‘சலீம்‘, ‘பிச்சைக்காரன்‘, ‘காளி’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். அந்த வரிசையில் தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தில் இயக்குநர் அவதாரத்தையும் முதல் முறையாக எடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வெற்றிப்பெறுள்ளது. அதிலும் தெலுங்கு வட்டாரத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2‘ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் விஜய் ஆண்டனி வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சிலரை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து உள்ளார். அப்போது ஏழை, எளிய மக்களுக்கு தன் கையாலேயே விஜய் ஆண்டனி உணவைப் பரிமாறி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.