close
Choose your channels

விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Monday, June 17, 2019 • தமிழ் Comments

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண்விஜய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'கோலிசோடா,' 'பத்து எண்றதுக்குள்ள' போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 1 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தையும் கொலைகாரன்' படத்தின் தயாரிப்பாளர்களே தயாரிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கோவா, டையூ, டாமன் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பிற்கான லொகேஷன் பார்க்கப்பட்டிருப்பதாகவும், இதுவொரு முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz