close
Choose your channels

விஜய் ஆண்டனியின் கதை வசனத்தில் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments

கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’பிச்சைக்காரன்’ இந்தத் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு காரணமாக இந்த படம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக விஜய் ஆண்டனி சமீபத்தில் தெரிவித்துள்ளார்

மேலும் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனத்தை விஜய் ஆண்டனியே எழுதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ’தமிழரசன்’ ’அக்னி சிறகுகள்’ ‘காக்கி’ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz