close
Choose your channels

இன்று ஒரே நாளில் மூன்று 'வி' நடிகர்கள் படங்களின் பூஜை

Thursday, March 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று ஒரே நாளில் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை', விஷாலின் 'துப்பறிவாளன்' ஆகிய இரண்டு படங்களின் பூஜை நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 'எமன்' படத்தின் பூஜையும் இன்று நடந்துள்ளது என்ற தகவலும் சற்று முன்னர் வெளிவந்துள்ளது. விஜய்சேதுபதி, விஷால் ஆகிய இருவரை தொடர்ந்து இன்னொரு 'வி' நடிகரான விஜய் ஆண்டனி படத்தின் பூஜையும் இன்றே நடந்துள்ளது என்பது ஒரு அபூர்வ ஒற்றுமை ஆகும்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனியின் முதல் படமான 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'இன்று நேற்று நாளை' புகழ் நடிகை மியா ஜார்ஜ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்குவது மட்டுமின்றி ஒளிப்பதிவையும் கவனிக்கின்றார். வீர செந்தில்ராஜ் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் சமீபத்தில் ரிலீஸான பிச்சைக்காரன்' படத்தின் சக்சஸ் மீட்டிங் சென்னையில் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.