close
Choose your channels

எங்க ஆட்டம்  வெறித்தனமா இருக்கும்! பிகில் டிரைலர்

Saturday, October 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிகில் படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த டிரைலர் வெறித்தனமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

பிரமாண்டமான கால்பந்து காட்சிகள், ‘செஞ்சரலாமா என வில்லன் கூட்டம் கேட்கும்போது ‘செஞ்சிட்டா போச்சு’ என வெறித்தனமாக கூறியவுடன் வரும் ஆக்சன் காட்சிகள், தந்தை விஜய்யின் ஆக்ரோஷமான நடை மற்றும் வித்தியாசமான நடிப்பு, நயன்தாராவுடன் ரொமான்ஸ், என டிரைலர் முழுவதும் விஜய்க்கான மாஸ் மற்றும் கமர்ஷியல் காட்சிகள் நிறைந்துள்ளன.

புள்ளிங்கோ கிரவுண்ட்ல விளையாடட்டும் நம்ம வெளியில விளையாடலாமா? என வில்லன்களிடம் நக்கலுடன் கேட்கும் விஜய், புட்பால் எல்லாம் தெரியாது ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என அப்பா விஜய் பேசும் காட்சி என விஜய் ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகள் டிரைலர் முழுவதும் தெரிகிறது

ஒருபுறம் விஜய்யின் நடிப்பு வேற லெவல் என்றால் இன்னொருபுறம் ஏ.ஆர்.ரஹ்மான் இறங்கி அடித்துள்ளார். பிரமாண்டமான ஃபுட்பால் காட்சிகள் கலை இயக்குனரின் உழைப்பை கண்முன் வைக்கின்றது.

புட்பால், ரெளடியிஸம், ரொமான்ஸ், வெறித்தனம் என அக்மார்க் விஜய் மற்றும் அட்லி கூட்டணி ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு எண்டர்டெயின்மெண்ட் படம் என்பதும் தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஒரு படம் என்பதும் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.