விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தல ரசிகர்களின் கட்-அவுட்

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் கோலிவுட் திரையுலகில் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது இருவரிடமும் நெருங்கிய பழகியவர்களுக்கு தெரியும்.

ஆனால் அதே நேரத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போடும் சண்டை உலகமே அறிந்தது. குறிப்பாக இருவரில் ஒருவர் படம் வெளியாகும் போது இன்னொரு தரப்பு கலாய்ப்பதும், அதற்கு பதிலடி கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தல, தளபதி ரசிகர்கள் ஒருசில இடங்களில் ஒற்றுமையாக இருக்கும் அபூர்வ சம்பவங்களும் நடப்பது உண்டு. ஜனவரி 12ல் வெளியாகவுள்ள விஜய்யின் 'பைரவா' படத்திற்கு தல ரசிகர்கள் கட் அவுட் வைத்து அந்த படம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர். இந்த கட்-அவுட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கட்-அவுட் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

முடிவுக்கு வந்தது பெட்ரோல் பங்க் - டெபிட் கார்டு பிரச்சனை

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் 1 சதவீதம் சேவை வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பெட்ரோல் நிலைய முகவர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.

ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சூர்யா

பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க ஜல்லிக்கட்டுவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண். காப்பாற்றிய கூகுள்

காதலன் கைவிட்டதால் வெறுப்படைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது அவரை கூகுள் காப்பாற்றிய நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது

ஜல்லிக்கட்டு தடை குறித்து கமல்ஹாசன் கருத்து

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக 'ஜல்லிக்கட்டு' நடத்தி வருவது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி அதிமுக உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த வழக்கின் விசாரணை சற்று முன் நடந்தது.