மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் மோதும் விஷால்

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படக்குழுவினர் வெளியிட்டிருந்த அறிக்கையை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அந்த போஸ்டர் தெரிவிக்கின்றது.

இளையதளபதி விஜய் நடித்த 60வது படமான 'பைரவா' ஏற்கனவே பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் அதே தினத்தில் விஷாலின் 'கத்திச்சண்டை' யும் ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு விஜய்யின் 'கத்தி' திரைப்படமும், விஷாலின் 'பூஜை' திரைபடமும் மோதிய நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சன்னிலியோனின் புதிய அவதாரம். இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

கனடாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் 'ஜிஸ்ஸம் 2' ...

இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி. ஏர்டெல் தொடங்கியுள்ளது

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகிய ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின்...

ரஜினி-விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தபோதிலும் அவர்களுடைய பாடல்களுக்கு யூடியூபில் கிடைத்த பார்வையாளர்களைவிட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் பாடல்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்

விஷ்ணுவுடன் முதன்முறையாக இணையும் அமலாபால்

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து குறித்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்த நடிகை அமலாபால், தற்போது கோலிவுட்டில் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப சென்ற வேன் திடீர் மாயம். ரூ.1.37 கோடி எங்கே?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக இரவுபகலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பும் பணி நடந்து வருகிறது.