close
Choose your channels

விஜய்யின் இந்த திடீர் மாற்றம் ஏன் தெரியுமா?

Tuesday, March 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதுவரை நீலாங்கரை வீட்டில் குடும்பத்துடன் இருந்த விஜய், தற்போது திடீரென பனையூர் வீட்டிற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த பல வருடங்களாக விஜய் தனது குடும்பத்தினர்களுடன் நீலாங்கரை வீட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த வீட்டை முழுவதும் இடித்துவிட்டு பெரிய வீடாக மாற்ற விஜய் குடும்பத்தினர்கள் விருப்பப்பட்டனர். எனவே கட்டுமான பணிகள் முடியும் வரை பனையூர் வீட்டில் இருக்க அவர்கள் முடிவு செய்துள்ளார். மேலும் வீட்டை மாற்றியது போல் இதுவரை பயன்படுத்தி வந்த ஸ்விப்ட் காரை விட்டுவிட்டு விஜய் தற்போது இன்னோவா காரை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.