'ஜனநாயகன்' படத்தின் விஜய்யின் பெயரே TVKவா? விரிவாக்கம் என்ன?


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் ’ஜனநாயகன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக முடிவடைந்து விடும் என்றும், குறிப்பாக விஜய்யின் காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கசிந்த தகவலின்படி ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் ;தளபதி வெற்றி கொண்டான்; என்று கூறப்படுகிறது. அதாவது, இதை சுருக்கினால் TVK என்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தனது கட்சியின் பெயரையே தனது கேரக்டரின் பெயராக அவர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறும் என்றும், அரசியலில் குதிக்கும் விஜய்க்கு இந்த படம் ஒரு நல்ல ப்ரமோஷன் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில், தளபதி விஜய்யின் கடைசி படம் ஒரு விறுவிறுப்பான அரசியல் கதையம்சம் கொண்டது என்பதால், ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments