close
Choose your channels

'பிகில்' விஜய் குறித்த முக்கிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

Tuesday, August 13, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிந்துவிடும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாக 'பிகில்' படத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் லோகேஷ் கனகராஜ் படத்திற்காக தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே 'பிகில்' படத்தில் தொழில்நுட்ப பணிகள் ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்தப்படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் ஆகியவை அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும், வரும் தீபாவளி அன்று இந்த படம் வெளியாவது உறுதி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz