close
Choose your channels

அஜித் பட வெற்றிக்கு வாழ்த்து கூறிய விஜய்! 

Sunday, January 12, 2020 • தமிழ் Comments

அஜித் பட வெற்றிக்கு வாழ்த்து கூறிய விஜய்! 

 

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான ’விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இந்த படத்தின் ஒரு ஆண்டு விழாவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நேற்று முன் தினம் கொண்டாடி மகிழ்ந்தனர்

இந்த நிலையில் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்திற்கு நேற்று நடந்த சினிமா விழாவில் சிறந்த பொழுதுபோக்குக்கான படம் என்ற விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ..சந்திரசேகர், ’விஸ்வாசம்’  படக்குழுவினர்களுக்கு அளித்தார் 

இந்த விருதை அளித்தவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியபோது, ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியானபோது அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதை அறிந்து அஜித் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர்களுக்கு தளபதி விஜய் போனில் வாழ்த்து கூறியதாக தெரிவித்தார். அஜித் படத்தின் வெற்றிக்கு விஜய் வாழ்த்து கூறிய தகவல் இப்பொழுதுதான் எஸ்ஏ சந்திரசேகர் மூலம் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Get Breaking News Alerts From IndiaGlitz