close
Choose your channels

தல அஜித்தின் உண்மையான கேரக்டரில் நடிக்கும் விஜய்!

Tuesday, May 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு மிகச்சிறந்த பைக் ரேஸர் என்பது அனனவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது அடுத்த படத்தில் பைக் ரேஸராக நடிக்கவுள்ளார்.

விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிப்பில் இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை இயக்கும் திரைப்படம் 'ஹீரோ'. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா சர்வதேச பைக் ரேஸராக நடித்து வருகிறார். இதற்காக இவர் சர்வதேச அளவில் பைக் பந்தயத்தில் வெற்றி பெற்ற சென்னை வீரர் ரஜினி கிருஷ்ணன் என்பவரிடம் முறையாக பயிற்சி பெற்று வருகிறார்.

விளையாட்டை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தாலும் இந்த படம் ஒரு த்ரில் படம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்து முடித்துள்ள 'டியர் காம்ரேட்' திரைப்படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.