காதலியை பகிரங்கமாக அறிவிக்கின்றாரா விஜய் தேவரகொண்டா... நெட்டிசன்களின் எல்லை மீறிய கற்பனைகள்..!

  • IndiaGlitz, [Wednesday,August 30 2023]

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு பெண்ணின் கையை பிடித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அவர் சமந்தாவுடன் நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு ’என் வாழ்க்கையில் முழு சந்தோஷம் என்று கூறியுள்ளார். மேலும் ’இது குறித்து அப்டேட் விரைவில் கொடுப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விஜய் தேவரகொண்டாவின் மனதை கவர்ந்த பெண் யார் என்று நெட்டிசன்கள் தங்கள் கற்பனை குதிரையை கட்டவிழ்த்து விடுகின்றனர். விஜய் தேவரகொண்டா பிடித்திருக்கும் அந்த கைக்கு சொந்தக்காரர் ராஷ்மிகா மந்தனா என்று ஒரு சிலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தேவரகொண்டா, விரைவில் தனது காதலியை பகிரங்கமாக அறிவிக்க இருக்கும் நிலையில் அவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தனுஷின் 'D51' படம் 40 வருடத்திற்கு முந்தைய அரசியல் கதையா? நாகார்ஜுனாவுக்கு என்ன கேரக்டர்?

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'D51' படத்தின் தகவல்கள் வெளியாகி

கவினின் 'ஸ்டார்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா? பிரபல மலையாள நடிகருமா?

கவின் நடித்து வரும் 'ஸ்டார்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் இந்த படத்தின் மேலும் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

'ஜவான்' படத்தில் விஜய் கேமியோ இல்லை.. அதற்கு பதிலாக இந்த பிரபலம் தான்.. மாஸ் தகவல்...!

 ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடிப்பில் அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'.  இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்: மலையாள வெப் சீரிஸ் மாஸ்டர்ஃபீஸ் டீசர் வெளியீடு !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்  இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் "மாஸ்டர்ஃபீஸ்" டீசர் வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு கிடைத்த தேசிய விருது: 'கருவறை' இயக்குனரை பாராட்டிய இளையராஜா

இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும்  கருவறை குறும்படத்திற்காக  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு  தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து,