விஜய் தயாரிக்கும் முதல் படத்தின் நாயகியான நடிகை!

  • IndiaGlitz, [Monday,April 15 2019]

'தெய்வமகள்' உள்ளிட்ட ஒருசில தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன், சமீபத்தில் வைபவ் நடிக்கும் 'N4' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை லோகேஷ் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் நாயகியாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான 'பெல்லி சூப்புடு' என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை சென்னையை சேர்ந்த சமீர் என்ற குறும்பட இயக்குனர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பது குறித்து வாணி போஜன் கூறியபோது, 'தனக்கு தெலுங்கு மொழி சரளமாக தெரியாது என்றாலும் படக்குழுவினர் பெரும்பாலானோர் தமிழில் பேசுவதால் தனக்கு சிரமம் இல்லை என்றும், வசனத்தை மனப்பாடம் செய்து ரிகர்சல் செய்து கொள்வதாகவும், படக்குழுவில் உள்ள சிலர் தனக்கு நல்ல ஒத்துழைப்பு தருவதால் தன்னால் தெலுங்கு படத்தில் எளிதாக நடிக்க முடிந்ததாகவும்' தெரிவித்துள்ளார்.
 

More News

சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படத்தின் டீசர் நேற்றிரவு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சமாதானமா?  சவாலா? பிரபல அரசியல் தலைவருக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் ராகவா லாரன்ஸ் சற்றுமுன் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

'மரம்' கருணாநிதிக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் கார்த்தி

சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேல் மரங்கள் நட்டு தனது பெயருக்கு முன்னால் 'மரம்' என்ற அடைமொழியை பெற்றுள்ள 55 வயது கருணாநிதி என்பவரை அவரது சேவையை பாராட்டி நடிகர் கார்த்தி ரூ.50 ஆயிரம் நிதியுதவி . 

'மக்கள் செல்வி' வரலட்சுமியின் அட்டகாசமான அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்-டைட்டில்

நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு விஜய், தனுஷ், விஷால் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது அவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை ரிலீஸ் செய்து வரும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கடந்த ஆண்டு 'பேட்ட', 96' உள்பட அவர் நடித்த 7 படங்கள் வெளியானது