விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ஹாட் லிப்கிஸ்: டியர் காம்ரேட்' டீசர்

  • IndiaGlitz, [Sunday,March 17 2019]

பிரபல தெலுங்கு நடிகரும் தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்தவருமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'டியர் காம்ரேட்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நான்கு மொழிகளிலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த டீசரில் 30 வினாடிகள் ஆக்சன் காட்சிகளும் மீதி வினாடிகளில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் ஹாட் லிப்கிஸ் காட்சியும் உள்ளன. இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தான், கார்த்தியின் அடுத்த பட நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் மே மாதம் 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்தை பரத் கம்மா இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் சுஜித் சரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.