விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ஹாட் லிப்கிஸ்: டியர் காம்ரேட்' டீசர்

  • IndiaGlitz, [Sunday,March 17 2019]

பிரபல தெலுங்கு நடிகரும் தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்தவருமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'டியர் காம்ரேட்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நான்கு மொழிகளிலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த டீசரில் 30 வினாடிகள் ஆக்சன் காட்சிகளும் மீதி வினாடிகளில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் ஹாட் லிப்கிஸ் காட்சியும் உள்ளன. இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தான், கார்த்தியின் அடுத்த பட நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் மே மாதம் 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்தை பரத் கம்மா இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் சுஜித் சரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில்

ஒரே நேரத்தில் விஜய்சேதுபதியுடன் நடிக்கும் அண்ணன் - தம்பி நடிகர்கள்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிசியாகிவிட்டார் என்பது தெரிந்ததே

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றது

பொள்ளாச்சி சம்பவம்: 19 வயது கல்லூரி மாணவியின் ஸ்டேட்மெண்ட்

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும்

18 வருடங்களுக்கு பின் தமிழுக்கு விருது பெற்று கொடுத்த '96' திரைப்படம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோலப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதில் இந்தியாவின் அனைத்து மொழி திரைப்படங்களும் பங்கு பெறுவதுண்டு.