close
Choose your channels

டிரைலரை விட மொக்கையா இருக்குது படம்: 'லைகர்' முதல் காட்சி பார்த்தவர்களின் விமர்சனம்

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படம், 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படம் இன்று வெளியாகி அதிகாலை 4 மணி காட்சி பார்த்த பலர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ட்ரெய்லரை விட படம் மொக்கையாக இருக்கிறது என்றும், பாதியிலேயே தூங்கி விட்டேன் என்றும், மைக்டைசனை விஜய்தேவரகொண்டா அடித்து உதைப்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் குத்துச்சண்டை படம் என்பதற்கான எந்த விஷயமும் இல்லை என்றும் தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களின் தரமான ஆக்சன் படங்களை பார்த்து பழகிய தமிழ் ரசிகர்களுக்கு ‘லைகர்’ படம் சுத்தமாக பிடிக்கவில்லை என்றே முதல் காட்சி விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.