close
Choose your channels

ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானிசங்கர் காதலுக்கு உதவி செய்யும் விஜய் தேவரகொண்டா!

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று திடீரென சமூக வலைதளங்களில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த புகைப்படத்தில் கமெண்ட்டுகள் தடைசெய்யப்பட்டு இருந்தது என்பதும் அதே போல் பிரியாபவானி சங்கரும் அதே புகைப்படத்தை பதிவு செய்து கமெண்ட்டுகளை தடை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படம் காரணமாக இருவரும் காதலிக்கிறார்களா? என்ற வதந்தி ஒரு பக்கம் பரவி வந்தாலும் இருவரும் இணைந்து நடித்து வரும் ’Pelli Choopulu’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் படத்திற்கான விளம்பரமாக தான் இங்கு இருக்கும் என்று ஏற்கனவே நாம் பார்த்தோம்

நாம் ஊகித்தபடியே தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நாளை மாலை 5.40 மணிக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட இருக்கிறார்

ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.