அபராதத் தொகையை நிவாரணமாக வழங்க விருப்பமில்லை: விஜய் தரப்பு பதில்

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நிவாரண நிதியாக வழங்க விருப்பமில்லை என விஜய் தரப்பு தனி நீதிபதி முன்பு கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

விஜய் வாங்கிய சொகுசு கார் குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய மேல்முறையீட்டு மனு இன்று தனி நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ரூபாய் ஒரு லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு ஏன் கொடுக்க கூடாது? என கேள்வி எழுப்பினார்

இந்த கேள்விக்கு பதிலளித்த விஜய் தரப்பு அபராதமாக விதிக்கப்படும் ரூபாய் ஒரு லட்சத்தை முதல்வர் நிவாரண நிதியாக வழங்க விருப்பமில்லை என்றும் ஏற்கனவே ரூபாய் 25 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துவிட்டேன் என்று பதில் அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன