'தளபதி 66' படத்தில் விஜய்க்கு டபுள் ரோல்? உறுதி செய்த பிரகாஷ்ராஜ்!

  • IndiaGlitz, [Monday,May 23 2022]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்திக்க விஜய் சென்றபோது உள்ள கெட்டப் தான் ’தளபதி 66’ படத்தின் விஜய் கெட்டப் என்று கூறப்பட்டது. இந்த கெட்டப்பில் அவர் இளமையான தோற்றத்தில் இருந்தார் என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், ‘தளபதி 66’ படப்பிடிப்பின்போது விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய் சற்று வயதான மற்றும் மாறுபட்ட ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் இருப்பதை அடுத்து இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

’ஹாய் செல்லம்’ நாங்கள் மீண்டும் திரும்பி விட்டோம்’ என பிரகாஷ்ராஜ் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், சம்யுக்தா, யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நெடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்!

திறமை இருந்தும் பல ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்துவந்த தினேஷ் கார்த்திக் தென்ஆப்பிரிக்காவிற்கு

'டிமாண்டி காலனி' இரண்டாம் பாகம்: ஆனால் மிகப்பெரிய மாற்றம்!

அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' வெளியாகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபலம்: கசிந்தது 'விக்ரம்' பட ரகசியம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்ததை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதிலும் அந்த தகவல் சமீபத்தில் கசிந்தது என்பதும் அதனை அடுத்து படக்குழுவினர்களே

கமல்ஹாசனின் 'விக்ரம்' ரன்னிங் இடம் இவ்வளவு அதிகமா? செம விருந்து காத்திருக்கு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

விக்ரம், சமந்தாவுடன் மோத முடிவு செய்த விஷால்: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர்களின் படங்கள் ரிலீசாகும் தினத்தில் தனது படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது