விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய விஜய்யின் குடும்ப உறுப்பினர்.. வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,January 31 2023]

கேப்டன் விஜயகாந்தின் திருமணநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து விஜய்யின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியலிலும் தனது முத்திரையை பதித்தார் என்பதும் அவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜனவரி 31ஆம் தேதி இன்று விஜயகாந்த் பிரேமலதாவின் 33வது திருமண நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அவரது கட்சியினர், ரசிகர்கள் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து ‘சாட்சி’, ‘வெற்றி’, ‘செந்தூர பாண்டி’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தைமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'தளபதி 67' படக்குழுவினர்களுக்காக தனி விமானம், தனி கவுண்டர்.. வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பதும் இந்த படத்தில் பணி புரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம். 

அந்த புக் எழுதி 100 வருஷம் இருக்கும் .. காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' டிரைலர்

 காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடித்த 'கருங்காப்பியம்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவை முந்திய ஹன்சிகா.. பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ்!

நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய திருமணம் நடந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த வீடியோ

திருப்பதி கோவிலில் மகனுக்கு ஆசி பெற்ற தமிழ் நடிகை.. புகைப்படம் வைரல்!

தமிழ் திரையுலகில் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தனது மகனுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆசி பெற்ற புகைப்படம், வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மருத்துவமனையில் விஜய் பட நடிகை.. குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனக்கு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.