'மாஸ்டர்' படம் பார்க்க விஜய்யின் வெறித்தனமான ரசிகை செய்த வேலையை பாருங்க!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியானது என்றும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை பார்ப்பதற்காக விஜய்யின் வெறித்தனமான ரசிகை ஒருவர் மலேசியாவிலிருந்து சென்னை வந்துள்ளார். ஆஷ்லினா என்ற அந்த ரசிகை சென்னை அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் உள்ள ஒட்டுமொத்த இருக்கைகளையும் புக் செய்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்

மேலும் திரையரங்கில் விஜய்யின் மாஸ் காட்சிகள் வரும்போது அவரும் எழுந்து நின்று கொண்டாடியது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்ததோடு ஒட்டுமொத்த தியேட்டரில் உள்ள இருக்கைகளை புக் செய்து படம் பார்க்க ரசிகையை விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

More News

3500 கிமீ பயணம்: சரத்குமார்-ராதிகாவின் வீடியோ வைரல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன 

பெண்கள் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தமிழக முதல்வர் செயல்படுத்திய பல அதிரடி திட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரைச் சுற்றும் மர்மம்… நடப்பது என்ன?

2036 வரை ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார் விளாடிமிர் புடின்.

பிப்ரவரி 5ல் ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் படம்!

கடந்த சில மாதங்களாக திரையரங்குகளுக்கு இணையாக ஓடிடியிலும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே

சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்? மபியில் நடந்த பரிதாபச் சம்பவம்!

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் கடந்த 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டது.