நிவாரண பொருட்கள் வேண்டாம், செல்பி ஒன்றே போதும்.. விஜய்யை ஆச்சரியப்படுத்திய ரசிகை..!

  • IndiaGlitz, [Saturday,December 30 2023]

தளபதி விஜய் இன்று நெல்லை உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில் தனக்கு நிவாரண பொருட்கள் வேண்டாம், உங்களுடன் ஒரு செல்பி மட்டும் போதும் என்று ரசிகை ஒருவர் கூறியது அவரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக இன்று நெல்லை சென்ற விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது ஒரு ரசிகை, விஜய்யின் காலில் விழுந்து வணங்கிய பின்னர், விஜய் நிவாரண பொருட்களை கொடுக்க முயன்றார். அவர் உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூற உடனே நிவாரண பொருட்களை அருகில் வைத்து விட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.

செல்பி எடுத்தவுடன் அந்த ரசிகை கிளம்பிய போது நிவாரண பொருட்கள் வேண்டாமா? என்று விஜய் கேட்க , ‘வேண்டாம் உங்களுடன் செல்பி எடுத்தால் மட்டும் போதும்’ என்று கூறி கூற, ’சரி ஓகே போங்க’ என்று விஜய் கூறிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

விஜயகாந்த்தை நினைத்து புன்னகைக்க நிறைய இருக்கின்றது: பிக்பாஸ் மேடையில் கமல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 90 வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன், விஜயகாந்த் குறித்த தகவல்களை பிக்பாஸ் மேடையில் பார்வையாளர்கள்

உள்ளே இருந்தபோது நான் ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன்: சரவணன் விக்ரம்

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் விக்ரம் சமீபத்தில் எவிக்ட்டான நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசி உள்ளார்.  

விஜயகாந்த் மறைவால் தள்ளிப்போகிறதா 'தளபதி 68' ஃபர்ஸ்ட் லுக்?

தளபதி விஜய் நடித்த 'தளபதி 68' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது விஜயகாந்த் மறைவால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மாயா கூட பரவாயில்லை, ஆனால் இவர் விஷக்கிருமி: விஷ்ணு சொன்னது யாரை?

மாயா கூட பரவாயில்லை, பூர்ணிமா விஷக்கிருமி என விஷ்ணு கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'அயலான்' பட நடிகை விவாகரத்து.. முடிவுக்கு வந்தது 14 வருட திருமண வாழ்க்கை..!

 'அயலான்' படத்தில் நடித்த நடிகை தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் அவருடைய 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.