close
Choose your channels

கொரோனா பாதிப்பு இல்லை என்றால் இன்று வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்': ரசிகர்கள் வருத்தம்

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் இன்று வெளியாகவிருந்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஓத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்று விஜய்யின் ’மாஸ்டர்’ படம் வெளியாகி இருக்கும் என்றும் நாங்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்து கொண்டாடியிருப்போம் என்றும் விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்தவுடன் மிக விரைவில் அந்த படம் வெளியாகும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.