close
Choose your channels

'சர்கார்' சர்ச்சையின்போது மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

Friday, December 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டிய அதிமுகவினர், சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன் போராட்டாம் செய்ததோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களும் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்தனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் என்று கூறப்படும் இருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் கத்தி, அரிவாளுடன் தோன்றிய அவர்கள் சர்கார் படத்திற்கு எதிராக போராடுபவர்களை மிரட்டும் வகையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறினர். இதனையடுத்து அந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மிரட்டல் வீடியோவில் தோன்றிய இருவரும், நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.