பிரபல கிரிக்கெட் வீரரிடம் 'பீஸ்ட்' அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள்: வைரல் வீடியோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர் ஒருவரிடம் ‘பீஸ்ட்’ அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிஎஸ்கே வீரர் மொயின்கானிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷமி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள், ‘ஷமி பாய் ‘பீஸ்ட்’ அப்டேட்' என்று கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’பீஸ்ட்’ படத்தின் அப்டேட் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் பாணியில் கிரிக்கெட் வீரர்களிடம் ‘பீஸ்ட்’ அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'எதற்கும் துணிந்தவன்' கெட்டப்பில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை: ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் முருகன் கெட்டப்பில் நடிக்க சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை என ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு கூறியுள்ளார் .

மறுமணத்திற்கு மூன்று கண்டிஷன் போட்டாரா டி.இமான்?

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் விரைவில் மறுமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது

யூடியூப் பிரபலம் 'பரிதாபங்கள்' சுதாகருக்கு திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்

'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த சுதாகர் மற்றும் கோபி ஆகிய இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே.

அனைத்து பெண்களுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு முன்னுதாரணம்: குஷ்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

மேலாடைக்கு பதிலாக மாற்று ஐடியா: பிக்பாஸ் நடிகையின் வீடியோ வைரல்!

பிக்பாஸ் ஓடிடி நடிகை ஒருவர் மேலாடைக்கு பதிலாக மாற்று ஐடியா கண்டுபிடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.