150 தினக்கூலி தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்களின் மகத்தான உதவி!

தமிழகமாக இருந்தாலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக இருந்தாலும் இயற்கை பேரிடர் நேரிடும்போது முதல் நபராக விஜய் ரசிகர்கள் உதவுவார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நெல்லையில் உள்ள காவல்துறையினருக்கு வாட்டர் பாட்டில், பிஸ்கட் ஆகியவற்றை நெல்லை பகுதி தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொடுத்தனர் என்பதும் இதற்கு நெல்லை போலீஸ் துணை கமிஷனர் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் வட சென்னையில் உள்ள தளபதி விஜய்யின் ரசிகர்கள் தற்போது அந்த பகுதியில் வாழும் தின கூலி தொழிலாளர்கள் 150 பேர்களுக்கு தலா 25 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒரு மாதம் பசியை போக்கி கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் இந்த மகத்தான உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய்யின் ரசிகர்களைப் போலவே மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை குடும்பத்தோடு பசியுடன் இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

More News

கொரோனா அவசர எண்ணை அழைத்து சமோசா கேட்ட வாலிபரை 'கவனித்த' கலெக்டர்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நகரங்களில் 24 மணிநேர அவசர உதவிக்கான இலவச உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து கோவை திரும்பிய 82 பேருக்கு கொரோனா அறிகுறியா? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் அந்த மாநாட்டிற்குப் பின்னர் தமிழகம் திரும்பிய பெரும்பாலானோருக்கு

மீண்டுவருவோம்; நம்பிக்கையளிக்கும் விதத்தில் “கோவிட்” எனப் பெயர்சூட்டப்பட்ட புலிக்குட்டி

மெக்ஸிகோவின் கோர்டபா நகரில் உள்ள ஒரு தனியார் மிருககாட்சி சாலையில் புதிதாகப் பிறந்த புலிக்குட்டிக்கு “கோவிட்” எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 74 ஆனது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் டெல்லி மாநாடு??? நடந்தது என்ன???

டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.