கைகழுவியது ஒரு குற்றமா? விஜய் ரசிகர்கள் புலம்பல்

  • IndiaGlitz, [Friday,October 11 2019]

அமலாபால் நடித்த ’சிந்து சமவெளி’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் சாமி, விஜய் குறித்து நேற்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி உள்ளார். விஜய் தனது ரசிகர்களை சந்தித்து கைகுலுக்கிய பின் உடனே தனது கையை டெட்டால் போட்டு கழுவுவார் என்றும், அவர் படத்தில் மட்டும் நடிக்கவில்லை நிஜத்திலும் நடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் இங்கு அரசியல் செய்ய பல தலைவர்கள் இருக்கின்றார்கள் என்றும், நீங்கள் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்றும் கருத்து சொல்லவும் வேண்டாம் என்றும், இது மாதிரி பொதுவெளியில் நடிப்பதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைத்து விஜய்யையும் விஜய் ரசிகர்களையும் அஜித் ரசிகர்கள் தாக்கி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இதற்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் ஆகட்டும் , பிரமுகர்கள் ஆகட்டும், மற்ற நடிகர்கள் ஆகட்டும் ரசிகர்களுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்த பின் கைகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். இதனை தீட்டு, தீண்டாமை என்று சொல்லக்கூடாது. ரசிகர்களை சந்திக்கவும், கைகுலுக்கவும் மறுக்கும் நடிகர்கள் மத்தியில் விஜய் தனது ரசிகர்களுடன் கைகுலுக்குவது மட்டுமின்றி அவர்களுடைய இன்ப, துன்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

விஜய் ரசிகர்களுடன் கைகுலுக்கி விட்டு அதன் பின் சுத்தம் காரணமாக கையை கழுவுவது தவறா? அப்படி என்றால் இதற்கு முன் ரசிகர்களை கட்டி அணைத்து விட்டு கை குலுக்கிவிட்டு யாரும் கை கழுவியது இல்லையா? விஜய்யை மட்டும் இவ்வாறு குற்றம் சொல்வது ஏன்? என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை.

More News

பிகில் டிரைலர் ரன்னிங் டைம்: அர்ச்சனா கல்பாதியின் டுவீட்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கும்

ஹன்சிகாவின் அடுத்த படத்தில் வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்!

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தத்தளித்து வந்த போதிலும் தற்போது அவர் 'மஹா' உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

கே.பாலசந்தர் படத்தில் பணிபுரிந்த சாக்சோபோன் கலைஞர் காலமானார்

கே.பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்திரி, பிரகாஷ்ராஜ் நடித்த 'டூயட்' என்ற படம் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் பிரபு ஒரு சாக்சோபோன் கலைஞராக நடித்திருப்பார்.

இயக்குனர் சங்கத்திற்கு சூர்யா செய்த சிறப்புக்குரிய உதவி!

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நடிகர் சூர்யா தங்கக்காசுகள் வழங்கி கெளரவித்தார் என்பது தெரிந்ததே

ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு விளக்கம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நாளை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர்.