close
Choose your channels

தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து.. 

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தாண்டு தீபாவளிக்கு தளபதி விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் வரும் பொங்கல் தினத்தில் அவருடைய ’வாரிசு’ படம் ரிலீசாக உள்ளது என்பதால் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் படம் வெளியாகவில்லை என்றாலும் விஜய் படங்களில் அப்டேட் வெளியாக உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி உள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் ’வாரிசு’ திரைப் படத்திற்கு இசையமைத்து வரும் தமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அட்டகாசமான போஸ் உடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து ’தீபாவளி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மறைமுகமாக தீபாவளிக்கு சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதை உறுதி செதுள்ளதாக தெரிகிறது.

அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கும் தீபாவளியாக அமைந்துள்ளது. மேலும் தீபாவளி அன்று விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.