போலீசார்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. மக்களின் உயிரை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் சாப்பாடு தண்ணீரை கூட பொருட்படுத்தாமல் சேவை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசாருக்கு அவ்வப்போது பொதுமக்களும் மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக தளபதி விஜயின் ரசிகர்கள் ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசாருக்கு வாட்டர் பாட்டில், பிஸ்கட் ஆகியவற்றை கொடுத்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் அப்பகுதி போலீசாருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

24 மணி நேரமும் பொது மக்களை காக்கும் பணியில் சேவையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு ஒருவேளை பிரியாணி விருந்து வைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டதாக தளபதி விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ் அவர்கள் கூறியதாவது: கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும், கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில், டாக்டர்கள், நர்ஸ், தூய்மைப் பணியாளர்கள், போலீஸாருடைய பங்குதான் அதிகம். ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்று போலீஸார் நமக்காகப் போராடுகிறார்கள் போலீஸ் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கேட்டபோது சாப்பாடு கிடைக்கும், ஆனால் சரியான நேரத்தில் கிடைக்காது என்றும், கிடைத்ததை சாப்பிடுவோம் என்றும் பிரியாணியை எல்லாம் பார்த்து நாட்கணக்கில் ஆகிவிட்டது என்றும் கூறினார்கள்.

இதனையடுத்து போலீஸாருக்கு பிரியாணி விருந்து வைக்க முடிவு செய்தோம். இதற்காக 200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம் என போலீஸார் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து வந்தோம். எல்லாரும் ரொம்பவே சந்தோஷமாக வாங்கி கொண்டார்கள். எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். தொடர்ந்து, நமக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களால் முடிஞ்ச உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறினார். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பலி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது தமிழக மக்களை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவா? அமெரிக்க நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இயல்பு நிலை திரும்பி விடும்

வெளியே போகாதே, உயிரை போக்காதே: சீனுராமசாமியின் கொரோனா பாடல்

கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை பல திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் பாடல் வரிகளில் என்.ஆர்.ரகுநாதனின் இசையில்

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் தினம் அனுசரிப்பு!!! நாடுமுழுவதும் மௌன அஞ்சலி செலுத்திய மக்கள்!!!

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவிய முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது

கொரோனாவால் உயிரிழந்தவர்களை கணக்கில் காட்டாமலே கல்லறைத் தோட்டங்களில் புதைக்கப்படும் அவலம்!!!

கொரோனா பாதிப்பின் மையங்களாக ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லப்படும் அளவிற்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.