close
Choose your channels

தளபதி விஜய்யால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் டெல்லியிலும் நடைபெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பூந்தமல்லி அருகே ’தளபதி 64’ படத்தின் மூன்று நாள் சிறிய படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இதனை அடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் கர்நாடக மாநிலம் சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் கர்நாடக மாநிலத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார். இதனையடுத்து விஜய் வருவதை அறிந்த கர்நாடக மாநில விஜய் ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோவையும் கர்நாடக மாநில விஜய் ரசிகர் மன்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஷிமோகா சிறைச்சாலையில் இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.