ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்!

தமிழகத்தில் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகின்றதோ அப்போதெல்லாம் முதல் நபராக களத்தில் இறங்கி உதவி செய்பவர்கள் தளபதி விஜய் ரசிகர்களாக தான் இருப்பார்கள் என்பது ஏற்கனவே அறிந்தது.

அதேபோல் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக மக்கள் ஊரடங்கால் தவித்து வரும் நிலையில் இந்த ஊரடங்கின்போது பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் நல்வழியில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலில் கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வறுமையில் வாடும் 100 திருநங்கைகள் மற்றும் 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்ட இந்த உதவிகள் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தது இந்த நடிகையின் மகளா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தபோது பிரபல நடிகை ஒருவரின் மகள் தான் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததாக அந்த நடிகை

ஆர்யா தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கும் விருது பெற்ற இயக்குனர்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சார்பாட்டா பரம்பரை' விரைவில் ரிலீசாக உள்ளது.

டாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....! ஸ்டாலின் கூறிய பதில்....!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இதற்காகத் தான் திறக்கிறோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் விளக்கம் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்!

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்புக்கு சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.