'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு

  • IndiaGlitz, [Tuesday,October 22 2019]

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் ரசிகர்களின் உருக்கமான வழிபாடு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

பிகில் படம் மிகப்பெரிய வெற்றியடைய நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறை வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டுக்குபின்னர் விஜய் ரசிகர்கள் கோயிலில் உள்ள வெறுந்தரையில் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.

இதுபோன்ற பிரார்த்தனைகளால் ஒரு படம் வெற்றி பெற்றுவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.