புதிய கல்விக் கொள்கை: விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு

  • IndiaGlitz, [Sunday,July 21 2019]

நடிகர் சூர்யா சமீபத்தில் தெரிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கமல்ஹாசன், சீமான், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த தனது நிலையையும் அது குறித்த சந்தேகங்களையும் மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டியும் ஒரு நீண்ட அறிக்கையை சூர்யா நேற்று வெளியிட்டு வெளியிட்டார்.

இதனை அடுத்து தற்போது விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று இயக்குனர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது 'சுதந்திர நாட்டில் நல்ல கருத்துக்களை பேச அனுமதி இல்லை. இது எல்லோருக்கும் நடந்துள்ளது. அதுபோலவே சூர்யாவுக்கும் நடந்துள்ளது. இருந்தாலும் நல்ல கருத்துக்களை அவர் தொடர்ந்து பேச வேண்டும். சூர்யா கூறியதைப் போன்றே நல்ல கருத்துக்களை தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும்' என்று விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் தந்தையும் ஆதரவு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இந்தியன் 2' படத்தில் இணைகிறாரா சூர்யா-கார்த்தி நாயகி?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.

'தனியா இருப்பிங்களா? கூட்டணி வைப்பீங்களா? கமலிடம் அசத்தல் கேள்வி 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று பார்வையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் பிக்பாஸ்  போட்டியாளர்களில் ஒருவரிடம் கேள்வி கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது.

'ஆடை' என் படத்தின் கதை: பார்த்திபன்

நடிகை அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக உள்ளது 

நீ எதிரியா? உதிரியா? பதறியே வா: 'தீ முகம் தான்' பாடல் வரிகள்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் 'தீ முகம் தான்' என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த அட்டகாசமான ஆவேசமான பாடல் வரிகளை தற்போது பார்ப்போம்