கண்தானம் செய்த விஜய் பட நடிகை… ரசிகர்கள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Wednesday,May 04 2022]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் கடந்த 2019 இல் வெளியான “பிகில்“ திரைப்படத்தில் நடித்திருந்த இளம் நடிகை ஒருவர் தனது கண்களை தானம் செய்துள்ளார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகாவின் குடகு மலையில் பிறந்தவர் வர்ஷா பொல்லம்மா. பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “சதுரன்“ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “96“ திரைப்படத்தில் போட்டோகிராபி கற்றுக்கொள்ளும் மாணவியாக நடித்திருந்தார். “பிகில்“ திரைப்படத்திலும் இவரது நடிப்பு பாராட்டப் பெற்றது.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் “செல்ஃபி“ திரைப்படத்தில் வர்ஷா நாயகியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு பாராட்டப் பட்டதைத் அடுத்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் கதாநாயகி வேடம் என்றில்லாம் குணச்சித்திரப் பாத்திரங்கள் கிடைத்தாலும் அதில் தேர்ந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

பல ஆண்டுகளாகச் சிறுநீரைக் குடித்து வாழ்ந்து வரும் விசித்திர மனிதன்… ஆச்சர்யத் தகவல்!

மனித உடல் வெளியேற்றும் கழிவுநீரான சிறுநீரை இங்கிலாந்து நாட்டில் வசித்துவரும் ஒருவர் பல ஆண்டுகளாகத் தினம்தோறும்

உக்ரைன் போரில் 2 கால்களையும் இழந்த காதலியை திருமணம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ

கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது படுபயங்கரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது என்பதும் இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பலியாகியும் காயமடைந்தும் உள்ளனர்

'காத்துவாக்குல' கதீஜாவாக நடிக்க இருந்தவர் இந்த பிரபல நடிகையா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூன்று

தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குவது இந்த இயக்குனரா?

இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் எடுப்பதற்கு புதிதல்ல. தோனி, சச்சின், ஜெயலலிதா உள்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

புதிய திரைப்படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்து: சின்மயி, கங்கை அமரனின் ரியாக்சன்!

நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்துவிற்கு கங்கை அமரன் மற்றும் சின்மயி காட்டிய ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.