close
Choose your channels

'தளபதி 67' படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய்யின் முதல் பட நடிகர்!

Tuesday, December 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் ’தளபதி 67’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே.

குறிப்பாக விஜய்யுடன் த்ரிஷா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இணையும் இந்த படத்தில் சஞ்சய்தத், கௌதம் மேனன், நிவின் பாலி, அர்ஜுன் உள்பட பலர் நடிக்க உள்ளது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராக மன்சூர் அலி கான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். விஜய் ஹீரோவாக நடித்த முதல் படமான ’நாளைய தீர்ப்பு’ உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் விஜய் படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார் என்பதும் தற்போது ’தளபதி 67’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.