close
Choose your channels

'தளபதி 64': நண்பர்களுக்கு கைகொடுத்த தளபதி விஜய்!

Saturday, October 5, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருடைய தீவிர ரசிகரும், நண்பருமான சாந்தனு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் நீண்ட கால நண்பர்களும் இந்த படத்தில் இணைகின்ற்னர். விஜய்யின் ஆரம்பகால படங்களில் அவருடைய நண்பர்களாக நடித்தவர்களும், நிஜத்தில் நண்பர்களாக இருப்பவர்களுமான ஸ்ரீமான், சஞ்சீவ், மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் ‘தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளனர். இந்த தகவலை ஸ்ரீமான், சஞ்சீவ், ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளனர். நெருங்கிய நண்பரான விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் பெருமையாக இருப்பதாகவும் இந்த வாய்ப்பை தனக்கு அளித்த இஅய்க்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தனது நன்றி என்றும் ஸ்ரீமான் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஸ்ரீமான், சஞ்சீவ், சஞ்சீவ் ஆகியோர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் எடுத்து கொண்ட புகைப்படமும் ‘தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ளது.

 

Get Breaking News Alerts From IndiaGlitz