close
Choose your channels

சிறந்த சர்வதேச நடிகர் விருதினை நெருங்கிவிட்ட தளபதி விஜய்

Tuesday, August 21, 2018 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆனதோடு, பல விருதுகளையும் குவித்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் IARA விருதுக்கு சென்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதில் 'சிறந்த சர்வதேச நடிகர்' என்ற விருதுக்கு விஜய்யின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விருதை விஜய் நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதுக்கு ஹாலிவுட் நடிகர்களான ஸ்டார் வார்ஸ் புகழ் ஜான் போயிகா, கெட் அவுட் திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ்(ஹொலியோக்ஸ்) க்ரிஸ் அட்டோ(ஸ்விங்ஸ்) விஜய் உள்பட 6 நடிகர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் உள்பட நால்வர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் ஒருவரே விருதை பெற தகுதி பெற்றவர் ஆவர்

இந்த விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22ஆம் தேதி லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.