close
Choose your channels

'பிகில்' ஃபர்ஸ்ட்லுக்கில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

Friday, June 21, 2019 • தமிழ் Comments

விஜய் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் 'பிகில்' என சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த படத்தின் டைட்டில் சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை கொஞ்சம் கவனிப்போம்

ஏற்கனவே வெளியான செய்தியின்படி விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார் என்பது இந்த ஃபர்ஸ்ட்லுக் மூலம் உறுதியாகியுள்ளது. 

மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கின் பின்னணியின் மீன்சந்தை போன்று இருப்பதால் விஜய் மீனவர் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம். தந்தை விஜய்யின் நெற்றியில் குங்குமம், விபூதி, கையில் சாமிக்கயிறு ஆகியவற்றை பார்க்கும்போது அவர் இந்த கேரக்டரில் நடித்துள்ள மத அடையாளமும் தெரிகிறது. ஆனால் அவர் கண்ணில் உள்ள கூர்மையை உற்று நோக்கினால் தாதா வேடத்தில் நடித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனை அவர் காலருகில் இருக்கும் ஆயுதமும் உறுதி செய்கிறது

மகன் விஜய்யின் தோற்றத்தில் ஒரு தோல்வியின் ஏமாற்றமும், சாதிக்க வேண்டும் என்ற வெறியின் உணர்வும் கலந்து காணப்படுகிறது. மேலும் 'ஹேப்பி தீபாவளி நண்பா' என்ற வாசகம் இந்த படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளதை மீண்டும் உறுதி செய்துள்ளது

மொத்தத்தில் 'தெறி', 'மெர்சல்' போன்று இந்த படத்தையும் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அட்லி, தளபதியின் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார் என்பது இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து தெரிய வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz