விஜய்யின் முதல் தீபாவளி திரைப்படம்: பிக்பாஸ் நடிகையின் மலரும் நினைவு
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக நேற்று வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகின்றது. இதற்கு முன் பல ஆண்டுகள் தீபாவளி அன்று விஜய்யின் படங்கள் வெளியாகியுள்ளது. உதாரணமாக ஷாஜகான், திருமலை, கத்தி , மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் விஜய்யின் தீபாவளி படங்களில் சில என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய் நடித்த படம் முதல் தீபாவளி என்ற பெருமையை பெற்ற படம் சந்திரலேகா. இந்த படத்தின் நாயகியும் பிக் பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் இதன் மலரும் நினைவாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: "24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் முதல் தீபாவளி ரிலீஸ் என்னுடன் நடித்த சந்திரலேகா தான். நாங்கள் இருவரும் பின்நோக்கி போய் எங்களுடைய அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். விஜய்யின் ஹீரோயின் நான் என்பதில் எனக்கு பெருமை", என குறிப்பிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமாரின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் வழக்கம்போல் ஆதரவு மற்றும் கிண்டலுடன் கூடிய எதிர்ப்பு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Senjutaaaaaa pochuuuuu nanba https://t.co/msXYx9DzTi
— atlee (@Atlee_dir) October 26, 2019