close
Choose your channels

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 'கில்லி' பட நடிகர்: 

Wednesday, May 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது திரையுலக பிரபலங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தது தொடங்கி பல பிரபலங்கள் மாரடைப்பு காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் கொரோனா தொற்று காரணமாகவும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்

நேற்று மாலை கூட தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி நடிகர் மாறன் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன

விஜய் நடித்த ’கில்லி’ சுந்தர் சி நடித்த ’தலைநகரம்’ சந்தானம் நடித்த ’ஏ1’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாறன் நடித்துள்ளார். செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாறன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.