'GOAT' பெயரில் இன்னொரு திரைப்படம்.. பொங்கல் போஸ்டர் வெளியானதால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,January 15 2024]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’GOAT' என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதும் Greatest of all time என்ற இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இதே ’GOAT' பெயரில் ஒரு தெலுங்கு படம் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நரேஷ் இயக்கத்தில் உருவாகி ’GOAT' கோட் திரைப்படத்தில் சுதிர் ஆனந்த் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். லியோ ஜான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பொங்கல் வாழ்த்துக்கள் உடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒருவேளை விஜய்யின் ’GOAT' திரைப்படமும், சுதிர் ஆனந்த் ’GOAT' திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசானால் தெலுங்கு ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானபோது கிட்டத்தட்ட அதே நேரத்தில் ‘ஜெயிலர்’ என்ற மலையாள திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விடாமுயற்சி' அப்டேட்டே வரல்லை.. அதற்குள் 'அஜித் 63' பூஜை நடைபெற்றதா?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி'  படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பொங்கல் அப்டேட் வரும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன்

குடும்பத்துடன் தனுஷ் கொண்டாடிய பொங்கல்.. ஒரே ஒரு நபர் மட்டும் மிஸ்ஸிங்..!

நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன்  பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வரும் ரசிகர்கள் ஒரே ஒருவர் மட்டும்

டைட்டில் வின்னர் பட்டம் அறிவித்த சில நிமிடங்களில் அர்ச்சனா போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

 பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் நடித்து வரும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

பொங்கல் வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர்கள்.. ரஜினிகாந்த் சொன்ன வாழ்த்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி உள்பட முக்கிய விசேஷ நாட்களில் அவருக்கு வாழ்த்து சொல்ல ரசிகர்கள் கூடுவது வழக்கமான ஒன்றே. ரஜினியும்  ரசிகர்களை

சித் ஸ்ரீராம் பாடிய 'சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே'.. 'லால் சலாம்' படத்தின் சூப்பர் பாடல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்ற நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்