விஜய்யின் 'லியோ' அட்டகாசமான தமிழ் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Wednesday,September 20 2023]

சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ‘லியோ’ படத்தின் விதவிதமான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அட்டகாசமான கலர்ஃபுல்லான இந்த போஸ்டரை பார்த்து விருது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து உள்ளனர் மேலும் ‘லியோ’ அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் வரை கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Keep calm and prepare for battle 🔥#LeoTamilPoster#LEO 🔥🧊 pic.twitter.com/J39jSyTbVa

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 20, 2023

More News

ஷாருக்கானுக்கு எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்.. அனிருத் இசை.. மாஸ் தகவல்.!

பிரபல இயக்குனர், ஷாருக்கானுக்கு எழுதி வைத்த கதையை தமிழுக்கு சில மாற்றம் செய்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

நடிகை சாய்பல்லவியின் அடுத்த படம்.. ஹீரோ இந்த பிரபலமா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திருடும் மீனா தம்பி.. கூண்டில் அடைக்கப்பட்ட விஜயா.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திருப்பம்..!

விஜய் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  

நான் கேட்டதை விட 3 மடங்கு சம்பளம் கொடுத்தார்கள்.. 'ஜெயிலர்' பிரபலம் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் அடுத்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே? நாயகன் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தை நெல்சன் இயக்கினார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் தெரிந்ததே.