close
Choose your channels

அடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'!

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையும் உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்துடன் முடிவடைந்து விடும் என்றும் அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

முதல் கட்டமாக விஜய் இந்த படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை முடிப்பார் என தெரிகிறது. அதனை அடுத்து இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகளின் டப்பிங் பணிகள் தொடங்கும். அதே நேரத்தில் இந்த படத்தின் பின்னணி இசை பணிகளையும் அனிருத் தற்போது கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் அனைவரும் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் நிச்சயம் வெளியாகும் என்று கூறப்படுகிறது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.