close
Choose your channels

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாகுமா மாஸ்டர் டீஸர்?

Wednesday, November 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களாக திரையுலகமே முடங்கியிருந்த நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முதல் திரையரங்குகளும் திறந்து விட்டன என்பதும் வரும் தீபாவளி முதல், ‘களத்தில் சந்திப்போம், ‘பிஸ்கோத்து’ உள்பட ஒரு சில புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி ஓடிடியில் சூரியாவின் ’சூரரைப்போற்று’ மற்றும் ஆர்ஜே பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற படங்களும் வெளியாக உள்ளதால் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படத்தின் ஒரு பாடலும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ படத்தின் டீசரும் பாவளிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் செய்திகளை பகிர்ந்து வந்தனர். ஆனால் இது குறித்து படக்குழுவினர் இன்னும் அதிக அபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் ’மாஸ்டர்’ டீசர் குறித்த எந்தவித அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது. ’மாஸ்டர்’ டீசர் குறித்து படக்குழுவினர் அமைதியாக இருப்பதைப் பார்க்கும்போது விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு ஏமாற்றமே காத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் டீசர் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார் என்பது தெரிந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.