விஜய்யின் 'தளபதி 67': அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தளபதி விஜய்நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய், சமந்தா, த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரித்விராஜ் உள்பட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகிய இருவரும் இணைந்த செல்பி புகைப்படம் ரத்னகுமாரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அதில் 1 முதல் 10 வரையிலான எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6,7 என்ற எண்களுக்கு பதிலாக பட்டாசு வெடிக்கும் எமோஜி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முதல் தொடங்கும் அல்லது ’தளபதி 67’ படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு தீபாவளி என்பதை மறைமுகமாக ரத்னகுமார் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ஒரு வருடத்திற்கு முன்பே வெளியான மாஸ் நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி!

ஹாலிவுட் திரையுலகில் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவித்து வருவது வழக்கமாக உள்ளது. அதேபோல் தென்னிந்திய மாஸ் நடிகர்

திருமணம், குழந்தை பிறப்புக்கு பின் சென்னைக்கு வரும் காஜல் அகர்வால்: என்ன காரணம் தெரியுமா?

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் குழந்தையின் புகைப்படத்தை

தேசிய கொடியுடன் திரையுலக நட்சத்திரங்கள்! வைரல் புகைப்படங்கள்!

இந்தியா முழுவதும் இன்று 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்

Wine + Dinner = Winner: பிரபல கவர்ச்சி நடிகையின் வேற லெவல் புகைப்படம்!

பிரபல கவர்ச்சி நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Wine + Dinner = Winner என்ற கேப்ஷனுடன் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து இரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: எங்கே இருந்தார் தெரியுமா?

 தமிழ் திரை உலகின் ஸ்டண்ட் மாஸ்டர் களில் ஒருவரான கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.