'தளபதி 69' படத்தில் இருந்து திடீரென பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. புதிய தயாரிப்பாளர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும், இதனை அடுத்து இந்த படத்தை தயாரிக்கும் புதிய நிறுவனம் எது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’தளபதி 69’ திரைப்படத்தை ’பாகுபலி’ ’ஆர்ஆர்ஆர்’ உள்பட பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து தளபதி விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை தயாரிக்க மூன்று நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, சன் பிக்சர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் புரடொக்சன்ஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே விஜய் படங்களை தயாரித்துள்ள நிலையில் மீண்டும் விஜய் படத்தை தயாரிக்க எந்த நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தனது அடுத்த பட அறிவிப்பை இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்க உள்ளதை எடுத்து அது ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout