'தளபதி 69' படத்தில் இருந்து திடீரென பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. புதிய தயாரிப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Wednesday,April 10 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும், இதனை அடுத்து இந்த படத்தை தயாரிக்கும் புதிய நிறுவனம் எது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’தளபதி 69’ திரைப்படத்தை ’பாகுபலி’ ’ஆர்ஆர்ஆர்’ உள்பட பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்நிறுவனம் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து தளபதி விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை தயாரிக்க மூன்று நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, சன் பிக்சர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் புரடொக்சன்ஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே விஜய் படங்களை தயாரித்துள்ள நிலையில் மீண்டும் விஜய் படத்தை தயாரிக்க எந்த நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தனது அடுத்த பட அறிவிப்பை இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்க உள்ளதை எடுத்து அது ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

ஆலுமா டோலுமா.. செம ஆட்டம் போட்ட பாண்டியராஜன் குடும்பத்தினர்.. வைரல் வீடியோ.!

நடிகர் பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் வெளியூர் சுற்றுப்பயணம் சென்று இருந்த நிலையில் அங்கு அவர் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தலைவர்களின் வெற்றி ரகசியம்💎 இதுதானா..? மோடி, ஸ்டாலின், அண்ணாமலை, சீமான் மோதிரக்கல் ..!

அரசியல் தலைவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருக்கும் ரகசியங்களை அறிய ஆர்வம் இருக்கிறதா? பிரபல ஜோதிடர் மற்றும் ரத்தின நிபுணர் GURUJI OM SM CHELLAPRABU

மனதளவில் தயாராகவில்லை.. ரகசியமாக திருமணம் செய்தது ஏன்? நடிகை டாப்சி விளக்கம்..!

எனது திருமணத்தை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை என்றும், அவ்வாறு அறிவிப்பதற்கு மனதளவில் நான் தயாராகவில்லை என்றும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்சி

மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படத்தில் தென்னிந்திய நடிகரா? கழுவி ஊற்றப்பட்டவர்தான் இயக்குனர்..!

உலக புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடன கலைஞர் மைக்கல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பிரபல இயக்குனர் திட்டமிட்டுள்ள நிலையில் இதில் மைக்கேல் ஜாக்சன்

லேடி காகாவின் லிப்கிஸ்.. ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு இன்னொரு ஆஸ்கர் விருது? 'ஜோக்கர் 2' டீசர்

ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு ஆஸ்கார் விருது