விஜய்க்காக வெற்றிமாறன் தேர்வு செய்த கதை இதுதான்.. அரசியலுக்கு செமயா இருக்கும் போல..!

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்க்கு வெற்றிமாறன் கூறிய கதை குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

தளபதி விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால் ’கோட்’ படத்திற்கு பிறகு ஒரே ஒரு படம் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். அதன் பிறகு முழுக்க முழுக்க அவர் அரசியலில் இறங்க இருக்கும் நிலையில் அவரது கடைசி படம் அவரது அரசியல் வருகைக்கு முன்னோடியாக மாஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இதற்காக அவர் ஒரு நாவலின் கதையை விஜய்யிடம் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நாவலின் கதை என்னவெனில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிந்த் மற்றும் கோபிநாத் ஆகிய இரு சகோதரர்களில் கோவிந்த் டெல்லியில் வழக்கறிஞராக இருப்பதாகவும் கோபிநாத் விவசாயியாக இருப்பதாகவும் கதை ஆரம்பமாகிறது. இந்த நிலையில் சரியான விளைச்சல் இல்லாததாலும், கடன் அதிகமானதன் காரணமாகவும் கோபிநாத் தற்கொலை செய்து கொள்ள, தனது சகோதரர் மரணத்தை விசாரிக்க டெல்லியில் இருந்து கிராமத்துக்கு திரும்பும் கோவிந்த், விவசாயிகள் அரசியல்வாதிகளால், பெரும் பண முதலைகளால் எந்த அளவுக்கு சுரண்டப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார்.

மேலும் விவசாயிகளை ஆட்டி படைக்கும் அந்த நபர்களிடமிருந்து விவசாயிகளை காப்பாற்ற எதிர்கொள்ளும் நடவடிக்கையால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை என்று தெரிகிறது.

புகழ்பெற்ற நாவலான ’ஷூ அப் த டெட்’என்ற நாவலை தான் விஜய்க்காக வெற்றிமாறன் கூறி இருப்பதாகவும் இந்த படத்தில் கோவிந்த் மற்றும் கோபிநாத் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் விஜய் தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வரும் முன் அவர் நடிக்க இருக்கும் கடைசி படம் விவசாயத்தின் ஆழத்தையும் விவசாயிகள் படம் கஷ்டத்தையும் கூற இருப்பதால் இந்த படம் விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு ஒரு மாஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜயகுமார் வீட்டில் டும் டும் டும்.. முதல் அழைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான்..!

நடிகர் விஜயகுமார் வீட்டில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் பத்திரிகை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா: உதயநிதியின் பழைய பதிவு வைரல்..

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்

கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்

சிறப்பான திட்டமிடுதலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும்  'புரொடக்ஷன் நம்பர்.1' படத்தை கோலிவுட்டின் பிரபல

நடிகை பூஜா குமாரின் மகளா இவர்? அதற்குள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே?

நடிகை பூஜா குமார் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் ஆர்யா.. இந்த படத்திற்காகவா? வைரல் வீடியோ..!

நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.