close
Choose your channels

'தளபதி 63' பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்து படக்குழுவினர் தொடர்ச்சியாக படப்ப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் போடப்பட்ட ஒரு செட்டில் 'தளபதி 63' படத்தின் பாடல் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த பாடலின் படப்பிடிப்பு இன்றும் நாளையும் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான பாடலுக்கு விஜய், நயன்தாரா நடனம் ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது

வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.